TODAY GOLD RATE : ஒரே நாளில் மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம்!!

சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் எட்டாக்கனியாக மாறிய இருக்கிறது.

அதாவது,நேற்று முன்தினம் ரூ.89.000-க்கு விற்பனை ஆனது. இதனைத் தொடர்ந்து ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11.125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11. 200-க்கு விற்பனை செய்யப்பட்டது

இந்த நிலையில் இன்று காலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஒரே நாளில் 2 வது முறையாக தற்போது தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது. அதாவது. ரூ.680 உயர்ந்து ரூ.91.080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.11,385-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே, வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. அதாவது காலையில் விலையில் எந்த விதமாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.170க்கும், கிலோவுக்கு ரூ. 3,000 உயர்ந்து ரூ. 1,70,000 விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News