Tuesday, February 17, 2026

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி, தற்போது ’வா வாத்தியார்’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், “வா வாத்தியார்” படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 5ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News