நிலம் வாங்கும் போது கிரய பத்திரத்தில் கவனிக்க வேண்டியவை! கவனமா இல்லைன்னா ஏமாற்றம் தான் மிச்சம்!

நிலம் வாங்குவது வாழ்க்கையில் பெரிய முதலீடு என்று செல்லலாம். எனவே, கிரய பத்திரம் அதாவது Sale Deed மிகவும் முக்கியமான ஆவணமாகும். இது நீங்கள் வாங்கும் நிலத்தின் உரிமை சட்டபூர்வமாக உங்கள் பெயருக்கு மாற்றப்பட்டதை உறுதி செய்யும் ஆதாரமாக இருக்கும்.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை பார்க்கலாம். உரிமையாளரின் தகவல்கள். நிலத்தின் தற்போதைய உரிமையாளர் யார் என்பதை சரிபார்க்க வேண்டும். அவரின் அடையாள ஆவணங்கள், பாஸ்போர்ட், ஆதார், வோட்டர் அட்டை போன்றவை சரிபார்க்கவும்.

அடுத்து நில விவரங்கள்: நிலத்தின் நிலவரம், சுத்தம், பரப்பளவு, அளவுகள் மற்றும் பின்புறச் வரலாறு பார்க்க வேண்டும். நிலத்தில் ஏதேனும் கடன், முன் உரிமையாளரின் வழக்குகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அடுத்ததாக கிரயப் பத்திரத்தின் சட்டபூர்வம்: சுருக்கு எழுத்தில் இல்லை என்பதை உறுதி செய்யவும். பத்திரம் சரியான ஜூரிடிக்கல் வடிவில் தயாரிக்கப்பட்டிருப்பதை Check செய்ய வேண்டும். இரு பக்கங்களும் ஒப்பந்தம் செய்திருப்பதை உறுதி செய்யவும்.

அடுத்து பணம் பரிமாற்ற விவரங்கள்: நிலத்திற்கான பணம் எப்படி, எப்போது பரிமாறப்பட வேண்டும் என்பதை கிரய பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். அடுத்ததாக ரஜிஸ்ட்ரி மற்றும் சான்றிதழ்: நிலம் பதிவு அதாவது Registration சட்டப்படி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் பதிவு செய்யப்பட்ட பிறகே நீங்கள் உரிமையாளர் ஆவீர்கள்.

எந்த சந்தேகம் இருந்தாலும், சட்ட வல்லுனர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம். மொத்தத்தில், நிலம் வாங்கும்போது கிரய பத்திரத்தில் எல்லா தகவல்களையும் நுணுக்கமாக, சட்டபூர்வமாக சரிபார்த்துக் கொள்ளுதல் உங்கள் முதலீட்டை பாதுகாக்கும் முக்கிய கருவியாக இருக்கும்.

Related News

Latest News