Tuesday, February 17, 2026

கும்கி-2 படத்தின் போஸ்டர் வெளியீடு!!

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா என பலர் நடிப்பில் வெளியான படம் ‘கும்கி’.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், பிரபு சாலமன், சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து ‘கும்கி 2’ படத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்த படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. ‘இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

மேலும், மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஹீரோ மதியின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

Related News

Latest News