ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 738 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தை மூன்று முறை பேரிடர் தாக்கி, ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டபோது வராத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூருக்கு வருகிறார். மணிப்பூர் கலவரம், கும்பமேளா மரணம், குஜராத் விபத்துக்கெல்லாம் குழு அமைக்காத பாஜக, கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறது.
தமிழ்நாட்டின் மீதுள்ள அக்கறையால் கிடையாது. அடுத்தாண்டு தேர்தல் வருவதால், இதன்மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, யாரையாவது மிரட்டலாமா எனப் பார்க்கிறது.
யாருடையாவது ரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் ஒட்டுனியாகதான் பாஜக இருக்கிறது. தமிழகத்தின் மீது அவர்கள் காட்டக்கூடிய வன்மத்தை நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்துக்கு வஞ்சகம் செய்வதை பாஜக தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.