சென்னை பஸ் செயலியை 127 கோடி ரூபாயில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தி வருவதாக மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 3 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக பேருந்துகளின் நேரம், வருகை உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள ‘சென்னை பஸ்’ செயலி நடைமுறையில் உள்ளது.
இதனிடையே மெட்ரோ, மின்சார ரயில், மாநகா் பேருந்து உள்ளிட்டவற்றில் ஒரே நேரத்தில் பயணிக்கும் வகையில் சென்னை ஒன் செயலி சமீபத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை 127 கோடி ரூபாயில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தி வருவதாக மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.