சென்னை கடற்கரை – விழுப்புரம் பிரிவில் செங்கல்பட்டு நிலைய பணிமனையில் இன்று பிற்பகல் 11.30 மணியிலிருந்து 2.30 மணி வரையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதன்காரணமாக 12 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அவற்றுக்கு பதிலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் சென்னை கோட்ட ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 11.30, 12, 1.10, 1.45, 2.20-க்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.