கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையொட்டி செல்லும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிதாக ஒரு ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இது குறித்து, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”ரயில்வே நடைமேடையின் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையப் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.