Thursday, October 2, 2025

சேலத்தில் பதுங்கியுள்ளாரா புஸ்ஸி ஆனந்த்? தனிப்படை போலீசார் கண்காணிப்பு

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதை தொடர்ந்து த.வெ.க. முக்கிய பிரமுகர்களான பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரையும் கைது செய்வதற்கு போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த், சேலம் மாவட்டத்தில் பதுங்கி உள்ளாரா என நேற்று இரவு முதல் கரூர் தனி படை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய இந்த தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் புஸ்ஸி ஆனந்த் இல்லை இருப்பினும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News