Monday, December 29, 2025

நடுரோட்டுக்கு வந்த மின்கம்பம்., புதிய சாலையால் மக்கள் அதிருப்தி

சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகரில் உள்ளது கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நோயாளிகள் வந்து செல்லும் நிலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் பல லட்சம் ரூபாயில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக மின்வாரிய துறை அதிகாரிகள் விரிவாக்க பணிக்கு தடங்கலாக இருக்கும் மூன்று மின்கம்பங்களை அகற்ற கூறியபோதும் அகற்றாமல் இருந்ததால் சாலை பணி தாமதமாக நடைபெற்றது.

தொடர்ந்து மின் கம்பங்கள் அகற்றப்படாததால் மின்கம்பம் இருந்தபடியே புதிதாக சாலை போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் வரிப்பணத்தில் செலவிடப்படும் தொகை அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாக செலவினம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Related News

Latest News