Wednesday, October 1, 2025

10 ரூபாய் பழனிசாமி என்று அழைக்கலாமா? – செந்தில் பாலாஜி கேள்வி

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அ.தி.மு.க. ஆட்சியிலும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது. ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதா? 10 ரூபாய் பழனிசாமி என்று அழைக்கலாமா? என்று அவர் விமர்சனம் செய்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News