கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து வதந்தி பரப்பியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் உடல் பரிசோதனை செய்ய சென்ற போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், யூடியூபர் ஜெரால்டு பெலிஸ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், பெலிக்ஸ் அக்டோபர் 3ஆம் தேதி ஆஜராகவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.