Wednesday, February 18, 2026

“அஜித்துக்கு ஜோடியாக நடிச்சா..” வீரம் படத்தில் மகளாக நடித்த யுவினா பேட்டி!! வைரல் போட்டோ..

‘ரைட்’ என்ற படம் இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்குகிறார், இந்த திரைப்படத்தில் ‘வீரம்’ படத்தில் அஜித்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த யுவினா
கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் வருகிற 26 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது.

அந்த விழாவில் பேசிய யுவினா, “அஜித்துடன் நான் இணைந்து நடித்ததால் மட்டுமே எனக்கு அடையாளம் கிடைத்திருக்கிறது. ரஜினியுடன் மீனா ஜோடியாக நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் நான் அஜித்துக்கு ஜோடியாக நடித்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அஜித்தும் அதனை விரும்ப மாட்டார்” என்று தெரிவித்தார்.

வீரம் படத்தில் நடித்த குழந்தையா இவங்க என்று தற்போது யுவினாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related News

Latest News