பாஜக இருக்கும் தைரியத்தில் விஜய் அகந்தையோடு பேசுகிறார் : அப்பாவு விமர்சனம்

சபாநாயகர் அப்பாவு நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பின்புலத்தில் பாஜக இருக்கும் தைரியத்தில் விஜய் அகந்தையுடன் பேசுகிறார். நான் ஒரு பிரசாரத்திற்கு வந்தால் இவ்வளவு நிபந்தனை போடுகிறீர்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ பிரசாரத்திற்கு வந்தால் இப்படி நிபந்தனை போடுவீர்களா? சி.எம். சார் போட்டு பாருங்களேன்’ என்று விஜய் சொல்வதிலிருந்தே அவர்கள்தான் இயக்குகிறார்கள் என்பது தெரிகிறது.

முதலமைச்சர், பிரதமர் குறித்து பேசும்போது கண்ணியமாக பேச வேண்டும். சினிமாவில் பேசுவது போல விஜய் பேசுகிறார். இந்த மாதிரி அகந்தை இருக்கக் கூடாது. விஜய்க்கு அரசியலில் அரிச்சுவடு தெரியாது என்று நினைக்கிறேன். விஜய் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார். இதை மக்கள் விரும்பவில்லை” என அவர் கூறினார்.

Related News

Latest News