நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடந்த செப் 20 சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் சுற்றுப்பயணம் செய்தார்.தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி வந்த தவெக தலைவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் சென்றார், அதன் பின்னர் திருவாரூருக்கு மதியம் 3 மணியளவில் வந்தடைந்தார். திருவாரூர் தெற்கு வீதியில் விஜயின் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, விஜயை வரவேற்கும் விதமாக கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து தவெக நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.தனது பிரசார வாகனத்தில் நின்றபடி அந்த மாலையை விஜய் ஏற்றுக்கொண்டார்.
திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அதாவது, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக ஜே.சி.பி உரிமையாளர் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
