Wednesday, February 18, 2026

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46.

சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் வெள்ளித்திரையில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

நேற்று முன்தினம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றபோது, திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நேற்று மாலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரோபோ சங்கரின் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related News

Latest News