Wednesday, February 18, 2026

STR 49 அப்டேட்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிலம்பரசன். ரசிகர்கள் இவரை சிம்பு, STR என்று அழைப்பார்கள்,இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தக் லைஃப். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். மேலும், இப்படம் அவர் தயாரிக்கும் 47வது திரைப்படமாகும். சிம்பு, இந்த படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் படக்குழு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது. இந்த நிலையில் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என வெற்றி மாறன் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

Related News

Latest News