Wednesday, February 18, 2026

தீபிகா படுகோன் அதிரடி நிபந்தனை!! அடுத்தடுத்த படத்திலிருந்து நீக்கம்!!

இந்திய சினிமாவில் 1000 கோடி வசூல் செய்யும் பெரும்பாலான திரைப்படங்கள் இரண்டாவது பாகம் வந்துவிடுகிறது.அந்த வகையில் 1100 கோடி ரூபாய் வரை தியேட்டர் ரிலீஸ் மற்றும் வசூல் செய்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் இருந்து முன்னணி நடிகை விலகியுள்ளார். இந்த தகவல்கள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது, நடிகர் பிரபாஸ், தீஷா பதானி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்த கல்கி திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.இப்படம் தெலுங்கு மொழியில் உருவான மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

மேலும், சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 1100 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்து இந்தியாவில் அதிக வசூலித்த படங்களில் நான்காவது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில், முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்த பாகத்தை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் நடிகை தீபிகா படுகோனே விலகி உள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கல்கி பட தயாரிப்பு நிறுவனம், “தீபிகாவுடன் ஆலோசித்த பிறகு கல்கி படத்தின் இரண்டாவது பாகத்தில் தீபிகா இடம் பெற மாட்டார் என்கிற முடிவுக்கு வந்துள்ளோம். அவருடைய எதிர்கால பணிகள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்” என்று அறிக்கையில் தெரிவித்தனர்.

அதாவது, நடிகை தீபிகா படுகோனே சினிமாவில் நடிப்பதற்கு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்வேன் என நிபந்தனை விதித்ததாக தகவல்கள் பரவின.அதன் தொடர்ச்சியாக பிரபாஸ் நடிப்பில் சந்திப் ரெட்டி வங்கா இயக்க உள்ள ஸ்பிரிட் படத்தில் இருந்து தீபிகா படுகோனே நீங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News