Wednesday, February 18, 2026

நடிகர் KPY பாலா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

சின்னத்திரையில் தனக்கென ஒரு சாரிகள் பட்டாளத்தை வைத்து, தன் சம்பாரிக்கும் பணத்தில் மக்களுக்கு உதவி செய்து தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஒருவர் தான் நடிகர் KPY பாலா. இவரின் முதல் படம் “காந்தி கண்ணாடி”. இவருடன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் சமீபத்தில் வெளியானது.

இந்த திரைப்படத்தை செரீப் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் எழுந்துள்ள நிலையில் படத்திற்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அதாவது,இந்த படத்தில் பிரதமர் மோடி குறித்து இழிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக KPY பாலா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை சிவசேனா கட்சி (தமிழ்நாடு) மாநில அமைப்பாளர் வேணுகோபால்ஜி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், “காந்தி கண்ணாடி” திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சியிலும், வசனத்திலும், பாடல்களிலும் பிரதமர் மோடி குறித்து இழிவுப்படுத்துவதாக உள்ளது. திரைப்படத்தின் இயக்குநர், பிரதமரை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளார்.

இது மக்களை குழப்பத்தில் தள்ளும் செயல். GST வரி விகிதத்தில் மாற்றம் செய்து பொருளாதார மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி வழிவகுத்துள்ளார். ஆனால் இது போன்ற திரைப்படங்கள் மூலம் மக்களின் மன நிலையை மாற்றும் செயலை செய்வது கண்டிக்கத்தக்கது. எனவே இந்த படத்தில் நடித்த KPY பாலா, பாலாஜி சக்திவேல், இயக்குனர் ஷெரீப் ஆகியோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகள், பாடல் வரிகள் ஆகியவற்றை நீக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related News

Latest News