ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த பிரபலங்கள் மீது கொண்டிருக்கும் அதீத பிரியம் காலம் கடந்தாலும் அழியாதது, ஆனால் அந்த ஆர்வத்தை வெளிப்படுத்த அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதாவது, AI மூலமாக தனக்கு பிடித்த பிரபலங்களோடு இருக்குமாறு வடிவமைத்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிலம்பரசன், இவருடைய ரசிகை ஒருவர் வடிவமைத்திருக்கும் AI புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது..அந்த புகைப்படத்தில் STR மற்றும் அந்த ரசிகையும் ஒரு கோவிலில் பாரம்பரிய உடையில் போஸ் கொடுப்பது, ஒரு பூங்கா பெஞ்சில் அமைதியான தருணத்தைப் பகிர்ந்து கொள்வது, மற்றும் professional, high-fashion photoshoots போன்ற புகைப்படங்கள் அவரது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். குறிப்பாக இந்தப் படங்கள் வெறும் கற்பனை மட்டுமே, இவை எல்லாம் AI மூலமாக கொண்டு உருவாக்கப்பட்டவை.
இந்த நிலையில், STR இன் தந்தையான மூத்த நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி உஷாவின் பழைய புகைப்படங்களை மேம்படுத்தவும் வண்ணமயமாக்கவும் STR இன் ரசிகை AI ஐப் பயன்படுத்தி வெளியிட்டுள்ளார். மேலும், நேற்று {செப் 16 } அவர்களின் 43 வது திருமண நாளை முன்னிட்டு இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளர். அவர் பதிவிட்டதில் “எனக்கு மிகவும் பிடித்த டி.ஆர். அப்பா மற்றும் உஷா அம்மாவுக்கு 43வது திருமண ஆண்டு வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அபரிமிதமாக வழங்கி, உங்கள் அனைத்து கனவுகளும் நிறைவேறட்டும்” என்றும் மேலும் “உங்கள் திருமண ஆண்டு விழாவில் என்னிடமிருந்து ஒரு சிறிய பரிசு” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த AI புகைப்படங்களும் மற்றும் பழைய புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
