இப்போதைய காலத்தில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன. இந்த போன்கள் இல்லாமல் ஒருநாள் கூட தொடங்குவது கடினம். ஆகவே, மொபைல் போன்கள் நம் வாழ்வில் அத்தியாவசியமாக மாறிவிட்டன. இந்த போன்களுக்கு வழங்கப்படும் சார்ஜர்கள் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
சில பிராண்டுகள் மட்டும் கருப்பு மற்றும் வேறு நிறங்களில் சார்ஜர்கள் வழங்குகின்றன.ஆனால் சார்ஜர்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்திலேயே கிடைக்கின்றன. சார்ஜர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் பிராண்டுகள் வெள்ளை நிற சார்ஜர்கள் உருவாக்க காரணமாக சில முக்கிய அம்சங்கள்
பிரீமியம் தோற்றம்
வெள்ளை நிறம் தூரத்திலிருந்து பளபளப்பாகவும் சுத்தமாகவும் தோன்றுகிறது. ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இதன் காரணமாக தங்களது சார்ஜர்கள் மற்றும் கேபிள்களை எப்போதும் வெள்ளை நிறத்தில் வெளியிடுகின்றனர்.
அழுக்கு மற்றும் கீறல்கள் தெரியும்
வெள்ளை நிறத்தில் அழுக்கு, கீறல்கள் ஆகியவை உடனடியாகத் தெரியும். ஒரு வகையில் இது பாதுகாப்பின் அறிகுறியாகும். கருப்பு அல்லது அடர் நிற சார்ஜர்களில் அழுக்கு எளிதில் மறைந்துவிடும். இதனால், மக்கள் அதை கவனிக்க தவறலாம்.
வெள்ளை பிளாஸ்டிக் தயாரிப்பது நிறுவனங்களுக்கு உடனடி மற்றும் மலிவான பணியாகும். உற்பத்தி மிக வேகமாகவும் செலவு குறைவாகவும் இருக்கும்.
குளிர்ச்சியான சுற்றுப்புறம்
சார்ஜர் செயல்படும் போது வெப்பம் உண்டாகும். வெள்ளை நிறம் வெப்பத்தை குறைந்த அளவுக்கு உறிஞ்சி, சார்ஜரை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் சார்ஜர் ஆயுள் நீடிக்கும்.
கருப்பு அல்லது வேறு நிற சார்ஜர்கள்
கருப்பு அல்லது வேறு நிற சார்ஜர்கள் பயன்படுத்துவது மோசமில்லை. நிறைய பிராண்டுகள் இப்போது பல வண்ணங்களில் சார்ஜர்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால், பெரும்பான்மையான நிறுவனங்கள் இதுவரை வெள்ளை நிறத்தில் சார்ஜர்களை அதிகமாக வழங்கி வருகிறார்கள்.
