2026 க்கான தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்திக்க ஒவ்வொரு தொகுதியாகசெல்கின்றனர். அந்த வகையில் அண்மையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு-மாடுகளின் மாநாடு, மரங்களுக்கான மாநாடு, என பல வகையில் மக்களை சந்தித்து வருகிறார்,
இந்த நிலையில், கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி சார்பில் “நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.அதில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். இதற்கு த.வெ.கவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில், த.வெ.க தலைவர் விஜய் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க உறுதிபட தெரிவித்துள்ளார்இந்த புகார் மனுவை தமிழக வெற்றிக்கழகத்தின் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் காஜா தலைமையில் நிர்வாகிகள் அளித்தனர்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பது, கோவையில் அண்மையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், த.வெ.க கட்சி தலைவரான நடிகர் விஜய்யை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும், ஒருமையிலும் பேசியதாகவும், இதனால் நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க கட்சி நிர்வாகிகள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், எங்களது கட்சித் தலைவரை அவமரியாதையாக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மோதல் போக்கை உருவாக்கும் வகையில் பேசி வரும் அவர் மீது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பிரச்சனை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
