டிரம்ப் வரிவிதிப்பால் ஆந்திராவுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளால், ஆந்திரப் பிரதேசத்தின் இறால் ஏற்றுமதியில் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சுமார் 50% ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம் நாட்டின் இறால் ஏற்றுமதியில் 80% மற்றும் கடல்சார் உணவு ஏற்றுமதியில் 34% பங்களிக்கிறது. இதன் வருடாந்திர மதிப்பு சுமார் ரூ.21,246 கோடி ஆகும். அமெரிக்காவின் 50% வரியால், ஆந்திர மீன் வளத்துறை கடும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும், இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.

Related News

Latest News