லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இப்படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர்கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.தற்போது இப்படம் ஓ.டி.டி யில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இப்படம் ரூ. 500 கோடி வரை வசூலித்து வணிக ரீதியான வெற்றியை ஈட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், வெளிநாடுகளில் ரூ. 180 கோடி வரை வசூலித்தும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் இழப்பையே அளித்திருக்கிறதாம்.
தமிழ்நாட்டில் ரூ. 200 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு இறுதியில் ரூ.147 கோடி மட்டுமே வசூலித்து இங்கும் ஏமாற்றத்தையே அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
