ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய நடைமுறைகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என்ற புதிய விதிமுறை வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
உண்மையான பயனாளர்கள் முன்பதிவு முறையில் பலன் பெறுவதற்காகவும், அங்கீகரிக்கப்படாத நபர்களால் நடைபெறும் முன்பதிவுகளை தடுக்கும் வகையிலும் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
கடந்த ஜூலை 1ஆம் தேதி தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அடையாளம் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது, ஜெனரல் டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரயில் பொது டிக்கெட் முன்பதிவுகளில் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிடம் அனுமதிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
