Wednesday, February 18, 2026

“பல ஜென்மம் தாண்டி வந்த உறவே…”வைரலாகும் மாதம்பட்டி ரங்கராஜின் புதிய வீடியோ!!

நடிகரும், பிரபல சமையல் கலை நிபுணராக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார். பிரதமர் முதல் பல பிரபலங்கள் இல்லங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜின் சமையல் குழு சமையல் செய்து கொடுத்து வருகிறது.

இதற்கிடையே, 2019-ல் தமிழில் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக அறிமுகமானார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் செஃப்பாக பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

இதற்கிடையே மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டில்டா என்பவரும் காதலித்து வருவதாக பேசப்பட்டுவந்த நிலையில்,ரங்கராஜுடன் காதலர் தினத்தை கொண்டாடியதாக ஜாய் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்

ஜாய் கிரிஸில்டா திரை பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். ஜாய் கிரிஸில்டாவுக்கு ஏற்கனவே 2018ம் ஆண்டில் பொன் மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக் என்பவரை திருமணம் ஆனவர்.இந்த நிலையில், 2023ம் ஆண்டு, இவர்கள் கருத்துவேறுபட்டால் பிரிவதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜை ஜாய் கிரிஸ்டில்டா திருமணம் செய்துக் கொண்டதாக அவரது சமூக வலைதளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். மேலும் தான் ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரிவித்தார். முதல் மனைவியை மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரத்து செய்யாமல் இருக்கும் நிலையில் ஆறு மாத கர்ப்பத்துக்கு பிறகு ஜாய் கிரிசில்டாவை திருமணம் முடித்தாரா என்ற கேள்விகள் எழுப்பி வந்தனர்.

இந்த சூழலில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். கடந்த ஒண்டரை ஆண்டுகளாக நாங்கள் திருமணம் செய்து ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம். நான் அவரோடு வாழணும். என் குழந்தைக்கு அவர் தான் அப்பா. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் உடன் தன்னிடம் பேசிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவரது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புதிய புகைப்படத்தை ஜாய் கிரிஸ்டில்டா வெளியிட்டுள்ளார்.

“வாழ்க்கை துணை’ என்று அழைப்பார்கள்… பிறகு…..” என்ற கேப்ஷன் உடன் ஜாய் கிரிஸ்டில்டா அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பலரும் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும்,மாதம்பட்டி ரங்கராஜின் பிறந்தநாளுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த வீடியோ மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவுக்கு பூங்கொத்தை கொடுத்துக்கும்போது “பல ஜென்மம் தாண்டி வந்த உறவே…” என சொல்லி முட்டி போட்டு தனது காதலை சொன்ன ரங்கராஜ் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். மேலும், புகைப்படம், மற்றும் கல்யாண மாலையை வைத்து ரங்கராஜ் கொடுத்த கிஃப்ட் கொடுத்ததையும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது..

Related News

Latest News