ஹைதராபாத்தில் ஒரே இரவில் 245 மிமீ மழை! வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று(திங்கள்) காலை 8 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக நாராயண்ராவ்பேட்டை பகுதியில் 245.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தட்டியன்னாரம் பகுதியில் 128 மிமீ, முஷீராபாத் பகுதியில் 114.5 மிமீ மழையும் பெய்துள்ளது. இந்த கனமழையால் அங்குள்ள சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஹைதராபாத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related News

Latest News