தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களுக்கான ‘எம்மி’ விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில், சிறந்த முன்னணி நடிகர், முன்னணி நடிகை, துணை நடிகைக்கான விருதுகளை ‘ஹேக்ஸ்’ காமெடி தொடர் வென்றது.
இதில், சேத் ரோஜென் சிறந்த முன்னணி நடிகருக்கான விருதையும், ஜீன் ஸ்மார்ட் சிறந்த முன்னணி நடிகைக்கான விருதையும் வென்றனர்.’ஹேக்ஸ்’ நகைச்சுவைத் தொடரில் நடித்ததற்காக ஹன்னா ஐன்பிண்டர் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.
இங்கிலாந்தின் ‘அடோல்சென்ஸ்’ தொடருக்கு சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை என ஆறு பிரிவுகளில் எம்மி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் நடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனான ஓவன் கூப்பர், சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். எனவே, எம்மி விருதை மிக இளைய வயதில் பெற்றவர் என்ற பெருமையை ஓவன் கூப்பர் பெற்றுள்ளார்.
இந்த தொடரை உருவாக்கியவர்களில் ஒருவரும், நடிகருமான ஸ்டீபன் கிரஹாம், விருது ஏற்புரையின் போது, தனக்கு துணை நின்ற குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.மேலும்,”மூன்று வருடங்களுக்கு முன்பு நான் ஒன்றுமில்லாதவன். இப்போது நான் இங்கே நிற்கிறேன்” எனக் கூறியுள்ளார்.இறுதியாக அனைவருக்கும் இந்திய முறைப்படி நமஸ்தே என்று கூறி உரையை முடித்தார். தற்போது இது சம்பந்தமான வீடியோ வைரலாகி வருகிறது..
