முன்னணி நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இயக்கி, நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். நான் தான் சிஎம் என்ற திரைப்படத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதில், பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தபிறகு போடப் போகும் முதல் கையெழுத்து, எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் சிங்காரவேலன் என்கிற பெயரில், சோத்துக் கட்சி என்ற கட்சியில் படகு சின்னத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார். படத்தின் தலைப்பு அறிவிப்புக்கு முன்னதாகவே, அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப் போவதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் “இரவின் நிழல்” ஆகும், இது அவர் இயக்கி, நடித்து, தயாரித்த ஒரு தமிழ் திரைப்படமாகும். இந்தப் படம் ஒரே ஷாட்டில் (Single-shot non-linear) எடுக்கப்பட்ட ஒரு வித்தியாசமான படைப்பாகும், மேலும், இந்த திரைப்படம் 2022 இல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
