Wednesday, February 18, 2026

நாஞ்சில் விஜயனுக்கு VJ வைஷ்ணவி வைத்த செக்? வைரல் வீடியோ!!

அண்மை காலமாக இணைத்தில் பெரும் பேசுபொருள்களாக இருப்பது, நாஞ்சில் விஜயன் மற்றும் VJ வைஷ்ணவி விவகாரம் தான். இவர்களுக்கு இடையிலான பிரச்னையை சுமூகமாக முடித்துக் கொள்ள நாஞ்சில் விஜயனும் அவரது மனைவியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அப்படி இருக்கையில் அவர்களுக்கு சின்னத்திரை நடிகை VJ. வைஷு பதில் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியது, ” கமிஷனர் அலுவலகம் முன்பு நான் பேட்டி கொடுக்கும்போது ஒரு ரிப்போட்டர் கேட்கும்போது, என்னைத் தெரியாது என்று கூறுகிறார் நாஞ்சில் விஜயன். அதன் பின்னர் ஒரு இடத்தில் பேட்டிக்குச் செல்லும்போது, பழகியிருக்கேன் என்று கூறியுள்ளார். மூன்றாவது தோழி என்று கூறியுள்ளார். நான்காவதாக சகோதரி என்று கூறியுள்ளார். இதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது என்பதை பொதுமக்கள் நீங்கள்தான் யோசித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

நான் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறேன் என்று நாஞ்சில் விஜயன் அப்பட்டமான பொய் சொல்லுகிறார். அப்படி நான் வட்டிக்கு விட்டு சம்பாதித்தால் எனது பொருளாதார நிலை இவ்வளவு மோசமாக மாறி இருக்காது. நான் மூன்று லட்சம் கொத்தற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார். அதற்கு மனசாட்சியும் காதலும் தான் ஆதாரம். நான் உங்களை நம்பிக் கொடுத்திருக்கிறேன் உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அந்த பணத்தை திருப்பிக் கொடுங்க. குறிப்பாக என்னை யாரென்று தெரியாதுனு சொல்லிவிட்டு, எனது வீடு முதல் மாடியில் தான் இருக்கிறது என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?

நான் பப்ளிசிட்டிக்காக இதைச் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். நாஞ்சில் விஜயன் என்ன ரஜினியா? கமலா? அஜித்தா? விஜயா? இப்போது தனியார் தொலைக்காட்சியில்சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். வி.ஜே. வைஷ்ணவி என்றால் அனைவருக்கும் தெரிகிறது. இப்படி இருக்கையில் எனக்கு என்ன பப்ளிசிட்டி தேவை இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

வைஷுவை திருமணம் செய்து கொண்டால், அவர் ஏற்கனவே பாலியல் தொழில் செய்து கொண்டு இருந்தவர், அவரது முந்தைய கணவர்கள் கேட்க மாட்டார்களா என்று கேட்கிறார். எனக்கு இதற்கு முன்னர் எத்தனை கணவர்கள் இருந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த பட்டியலை அவர் வெளியிடுவாரா? ” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்

Related News

Latest News