Wednesday, February 18, 2026

கூலி படத்தில் நான் நடிச்சதே தப்பு ! புலம்பிய அமீர்கான்! உண்மை என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த கூலி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் ஆதரவை பெறவில்லை. இந்நிலையில், இந்த படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய தவறு என அமீர்கான் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படமும் வெளியாகி வசூலில் சில நூறு கோடிகளை குவித்ததாக சொல்லப்பட்டாலும், விமர்சன ரீதியாக திரைப்படம் பெரிய அளவுக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய தவறு என அமீர்கான் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, “ரஜினி சாருக்காகத்தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், என் கதாபாத்திரம் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. எனது கதாபாத்திரம் மோசமாக எழுதப்பட்டிருந்தது.

அந்த காட்சி சரியாக அமையவில்லை, அவ்வளவுதான். அது ஒரு பெரிய தவறு, எதிர்காலத்தில் இது போன்ற விஷயங்களில் நான் மிகவும் கவனமாக இருப்பேன்” என்று சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அமீர்கான் தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே இந்த தகவல் தவறானது என்றும் சிலர் கூறுகின்றனர்.

Related News

Latest News