Wednesday, February 18, 2026

அரசு போட்ட அதிரடி உத்தரவு.., தியேட்டர்களில் இனி டிக்கெட் விலை இதுதான்.!

சினிமா டிக்கெட் விலையை கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடக அரசு புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி திரையரங்குகள் மற்றும் மல்ட்டி பிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட்டுகளின் விலை வரி இல்லாமல் அதிகபட்சமாக ரூ.200ஆக நிர்ணயிக்கப்படும், எனினும் 75 அல்லது அதற்கும் குறைவான இருக்கைகள் கொண்ட பிரீமியம் வசதி கொண்ட திரையரங்குகளுக்கு இந்த விலை கட்டுப்பாடு பொருந்தாது.

இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் 15 நாட்களுக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த புதிய விதி பொதுமக்களுக்கு திரைப்படம் பார்ப்பதை மேலும் எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News