Wednesday, February 18, 2026

30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா 2

கன்னடத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து, 2022ஆம் ஆண்டு வெளியான படம் காந்தாரா. இப்படம் உலகளவில் 400 கோடிக்கு மேல் வசூலித்து, கன்னட திரையுலகில் இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக பாராட்டு பெற்றது.

‘காந்தாரா 2’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது.

‘காந்தாரா 2’ படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Related News

Latest News