Wednesday, February 18, 2026

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தின் முதல் நாள் வசூல்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான ‘மதராஸி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜாம்வால், பிஜூமேனன், ‘டான்சிங் ரோஸ்’ சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது மதராஸி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் இந்திய அளவில் ரூ.13 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இன்று மற்றும் நாளை வார விடுமுறை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Related News

Latest News