பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் டி.ஜே. சத்தம் உயிர்க்கு ஆபத்தானது என்று சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது. ஜெர்மனியில் உள்ள மெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவமையம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் உள்பட 15,000 பேரை வைத்து ஆராய்ந்தனர்.
அவர்களுக்கு ஒலிபெருக்கிகள் மற்றும் டி.ஜே. ஒலிகள் ஒரு குறிப்பிட்ட அளவை கடந்தால் இதயத் துடிப்பு மாற்றம் காணப்பட்டது. இதனுடன், மன அழுத்தமும் அதிகரிக்கும் என்பது தெளிவுபட்டது. டி.ஜே. ஒலிகள், மன அழுத்தம், ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றை உயர்த்துகின்றன.
ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதத்தால் இறக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக பைபாஸ் அறுவை சிகிச்சை பெற்றவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், 100 டெசிபல் அளவுக்கு மேல் ஒலிகள் நீண்ட நேரம் கேட்கப்படும் போது கேட்கும் திறன் பாதிக்கப்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்களும் டி.ஜே. சத்தத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பதும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது. எனவே, டி.ஜே. ஒலிபரப்பும் இடங்களில் எச்சரிக்கை அவசியமாகும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.
