Wednesday, February 18, 2026

அந்த உரிமையாளர் யார்? : குட் பேட் அக்லி படம் மீது இளையராஜா புகார்..!

இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. இப்படத்தில் த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் “இளமை இதோ இதோ” உள்ளிட்ட இளையராஜா இசை அமைத்த பல்வேறு பாடல்கள் பயன்படுத்தபட்டுள்ளது. இதையடுத்து தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா ரூ.5 கோடி கேட்டு படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

சம்பந்தப்பட்ட இசை கம்பெனிகளிடம் முறையே அனுமதி பெற்ற பிறகே பாடல்களை பயன்படுத்தியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் குட் பேட் அக்லியில் தனது பாடல்களை பயன்படுத்தியது, பதிப்புரிமை சட்டத்துக்கு விரோதமானது என்றுகூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெற்றதாகக் கூறப்படும் அந்த உரிமையாளர் யார்? என்பது குறித்து குட் பேட் அக்லியின் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமையில் (செப். 8) விசாரணைக்கு வரவுள்ளது.

Related News

Latest News