Wednesday, February 18, 2026

இன்று வெளியாகும் 5 திரைப்படங்கள் : சினிமா பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்..!

அன்பான சினிமா பிரியர்களே இன்று உங்களுக்கு விருந்து தான்.. என்னனு கேக்குறீங்களா? இன்று 5 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்!!

மதராஸி

சிவகார்த்திகேயன் நடிப்பில் “மதராஸி” ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் படம் மதராஸி. இந்த திரைப்படத்தில் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யுத் ஜம்வல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையை அனிருத் அமைத்துள்ளார்.

பேட் கேர்ள் {Bad Girl}

வெற்றிமாறன் தயாரிப்பில் “பேட் கேர்ள்” {Bad Girl}. இந்த திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்க அஞ்சலி சிவராமன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

காந்தி கண்ணாடி

சின்னத்திரையில் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கலக்கிய பாலா தற்பொழுது “காந்தி கண்ணாடி” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். பாலாவின் புதிய முயற்சியாக உருவான இந்த திரைப்படம், சமூக பிரச்சனைகள் மற்றும் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

காட்டி

பெண்கள் மையமாக இருக்கும் சுவாரஸ்யமான த்ரில்லர் திரைப்படமாக அனுஷ்கா நடிப்பில் “காட்டி” படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி கான்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்

பிரபல ஹாலிவுட் ஹாரர் பிராண்டின் புதிய பகுதி வெளியாகி உள்ளது. ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு அதிரடி அனுபவத்தை வழங்கம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகமொத்தம் 5 திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. ஆக்ஷன், டிராமா, ஹாரர் என பல வகைகளில் வெளியாகும் இந்த படங்கள், பாக்ஸ் ஆபிஸ் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related News

Latest News