Friday, August 29, 2025
HTML tutorial

‘மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்’.. போலீசில் பரபரப்பு புகார் கொடுத்த ஜாய் கிரிசில்டா!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் நடுவராகவும், பிரபல சமையல் கலைஞராகவும். இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ்.இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 26ஆம் தேதி ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராமில் கோயிலில் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை பகிர்ந்து “Mr & Mrs Rangaraj” என்று குறிப்பிட்டார். அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, “Baby loading 2025” என்று அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுத்தார்.
இந்த பதிவால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, முதல் மனைவி ஸ்ருதி இருக்கும் நிலையில் மற்றொரு பெண்ணோடு ஒன்றாக இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே சமயத்தில் மாதம்பட்டி ரங்கராஜின் மனையில் ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில் இன்னும் “Madhampatty Rangaraj’s wife” என்று பயோவை மாற்றாமல் அமைதி காத்து வந்தார்.

இந்த நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியோடு திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவிய வந்த நிலையில். தற்போது ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதாவது, நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ்,தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார். சென்னையில் கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ், 7 மாத கர்ப்பமாக இருக்கும் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். தற்போது இத புகார் பெரும் பேசுபொருளாகியுள்ளது..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News