Monday, December 29, 2025

கள்ளகாதலியின் வாயில் வெடி வைத்து கொன்ற காதலன்..!

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் ரக்‌ஷிதா (20). இவருக்கும் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு ரக்ஷிதாவுக்கு சித்தராஜு என்ற நபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. திருமணத்திற்கு பின்பும் இது தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், ரக்‌ஷிதாவும், சித்தராஜுவும் நேற்று ஹிர்யா கிராமத்திலுள்ள ஒரு லாட்ஜூக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது வாக்குவாதமாக வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சித்தராஜு, தான் மறைத்து கொண்டுவந்த வெடிமருந்தை ரக்‌ஷிதாவின் வாயில் அடைத்து அதை வெடிக்கச்செய்துள்ளார்.

இதில், ரக்‌ஷிதாவின் முகம் முழுவதுமே வெடித்து சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சித்தராஜுவை போலீசார் கைது செய்து அவரை விசாரித்து வருகின்றனர்.

Related News

Latest News