உலகின் பலத்த மற்றும் வலிமையான நாடுகள் இன்று வானில் ஆதிக்கம் செலுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ரஷ்யா மீண்டும் தனது வலிமையை வெளிப்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் ரஷ்யா Su-35S என்ற போர் விமானத்தை தனது விமானப்படையில் சேர்த்துள்ளது.
Su-35S என்பது 4++ தலைமுறை மல்டி-மிஷன் போர் விமானமாக வரையறுக்கப்படுகிறது. இது மாக்ஸ் 2.25 வேகத்தில், அதாவது மணிக்கு சுமார் 2,400 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது. இந்த Su-35S விமானம் 18,000 மீட்டர் உயரம் வரை ஏறி, 3,600 கிலோமீட்டர் தொலைவில் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது என்பதால் மிகவும் ஆபத்தான ஆயுதமாகும். இதில் நிறுவப்பட்டுள்ள ரேடார் 400 கிலோமீட்டர் தொலைவில் இலக்குகளை கண்டறிய முடியும். ஒரே நேரத்தில் 30 இலக்குகளைக் கண்காணித்து, அதிலிருந்து 8 இலக்குகளை ஒருமுறையில் தாக்கும் திறனும் Su-35Sக்கு உள்ளது.
Su-35S போர் விமானத்தின் ஆயுள் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருப்பதால், இது ரஷ்ய விமான சக்திக்கு நீண்ட காலத்திற்கான முக்கிய ஊக்கமாக விளங்கும் என கணிக்கப்பட்டு வருகிறது.