Friday, August 22, 2025
HTML tutorial

அமெரிக்காவில் 5.5 கோடி பேருக்கு ஆப்பு! டிரம்பின் ஒற்றை உத்தரவால் காத்திருக்கும் அதிர்ச்சி!

அமெரிக்காவில் வேலை, படிப்பு, சுற்றுலா என்று சென்றிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருக்கிறது. நீங்கள் அமெரிக்காவில் சரியான விசாவுடன் இருந்தாலும், உங்கள் தலையின் மீது ஒரு பெரிய கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது! ஆம், சுமார் 5.5 கோடி பேரின் விசாக்கள் ரத்து செய்யப்படலாம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புலம்பெயர்ந்தோர் விஷயத்தில் எப்போதுமே மிகவும் கண்டிப்பானவர். ஆனால், இந்த முறை சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்களை மட்டும் குறிவைக்கவில்லை. மாறாக, முறையான, செல்லுபடியாகும் விசா வைத்திருக்கும் 5.5 கோடி பேரின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி இருக்கிறார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதாவது, ஒருவருக்கு 10 வருடத்திற்கான சுற்றுலா விசா இருந்தாலும் சரி, அல்லது வேலைக்கான விசா இருந்தாலும் சரி, அதை மீண்டும் சரிபார்க்கப் போகிறார்கள். அதில் ஏதாவது ஒரு சிறு முரண்பாடு கண்டுபிடிக்கப்பட்டால் கூட, உங்கள் விசா உடனடியாக ரத்து செய்யப்படும். நீங்கள் அப்போது அமெரிக்காவில் இருந்தால், நாடு கடத்தப்படுவீர்கள்!

விசாவில் குறிப்பிட்ட காலத்தை விட அதிகமாகத் தங்கியிருந்தாலோ, ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலோ, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சந்தேகம் எழுந்தாலோ,
அல்லது தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலோ உங்கள் விசா ரத்து செய்யப்படலாம்.

இந்த உத்தரவு ஒரு குறிப்பிட்ட துறையை மிக மோசமாகப் பாதித்திருக்கிறது. அதுதான் லாரி ஓட்டுநர்கள்! அதிபர் டிரம்பின் தலைமையகத்திற்கு அருகே ஒரு பயங்கர விபத்து நடந்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு லாரி ஓட்டுநர்களுக்கு விசா வழங்குவதை அமெரிக்கா உடனடியாக நிறுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, அமெரிக்க சாலைகளில் லாரி ஓட்ட வேண்டுமென்றால், கட்டாயமாக ஆங்கிலம் பேசவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்றும் டிரம்ப் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.

மொத்தத்தில், இந்த 5.5 கோடி விசாக்களுக்கான மறு ஆய்வு என்பது ஒரு முடிவே இல்லாத செயல்முறை போல தொடர்ந்து நடக்கப்போகிறது. இதனால், இப்போது அமெரிக்காவில் இருப்பவர்களின் விசா கூட எந்த நேரத்திலும் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News