தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,644 காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு நவ.9-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
காவல் துறையில் 2-ஆம் நிலை காவலா் பணியிடங்கள் 2,833 காலியாகவுள்ளன. மேலும் சிறை மற்றும் சீா்திருத்தத் துறையில் 180 காலிப் பணியிடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 631 தீயணைப்பாளா் பதவியிடங்களும் காலியாக உள்ளன.
2-ஆம் நிலை காவலா் காலிப் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வை எழுத 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா்களின் வயது உச்சவரம்பானது வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கு தகுந்தவாறு மாறுபடும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க செப்.21-ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பித்த பிறகு, செப்.25-ஆம் தேதிக்குள்ளாக திருத்தங்களைச் செய்யலாம். நவ.9-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.