டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு மத்திய அரசு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியது. ரேகா குப்தா இல்லத்திற்கு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் முதலமைச்சர் ரேகா குப்தா பங்கேற்றபோது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் முதலமைச்சரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.