அமைச்சர் துரைமுருகனுக்கு என்ன ஆச்சு? நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் திடீரென மயங்கியதால் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் துரைமுருகனுக்கு தோல்பட்டை எலும்பில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. காயம் காரணமாக துரைமுருகனுக்கு கையில் கட்டு போடப்பட்டுள்ளது. மேலும் மூன்று நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அமைச்சர் துரைமுருகனை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் மருத்துவர்கள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

Related News

Latest News