Thursday, February 19, 2026

நெகட்டிவ் விமர்சனத்தால் படிப்படியாக குறைந்து போன கூலி படத்தின் வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர்கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக வசூல் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் ரூ. 65 கோடி வசூல் செய்தது.

இரண்டாவது நாளில் ரூ. 54.75 கோடியும், மூன்றாவது நாளில் ரூ. 39.5 கோடியும் வசூல் செய்துள்ளது. விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூலி படம் இந்தியாவில் ரூ. 34 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

Latest News