வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது நினைவு தினமான இன்று டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவரைத்தொடர்ந்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related News

Latest News