Tuesday, December 30, 2025

ராக்கி கட்டிய 14 வயது சிறுமிக்கு அண்ணன் செய்த கொடூர செயல்

உத்தரபிரதேசத்தில் ரக்ஷா பந்தன் அன்று தனது கையில் ராக்கி கட்டிய தங்கை முறை உறவு கொண்ட 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுர்ஜித் (33) என்ற நபர் தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது மாமாவின் மகள் சுர்ஜித்துக்கு ராக்கி கட்டியுள்ளார். இதையடுத்து இரவில் மது அருந்திய சுர்ஜித் போதையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். பிறகு சிறுமியின் உடலை அந்த அறையில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை போல சித்தரித்துள்ளான்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுர்ஜித்தை கைது செய்தனர். சுர்ஜித் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related News

Latest News