Thursday, February 19, 2026

ஓடிடியில் வெளியாகும் ரஜினியின் ‘கூலி’ பட ஆடியோ வெளியீட்டு விழா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ், ஆமீர்கான், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாயிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் ‘கூலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News