Friday, August 8, 2025
HTML tutorial

தண்டனை நிச்சயம் – தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

சமீப காலமாக நடந்த பல தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

கடந்த பாராளுமன்ற தேர்தல், மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் போன்றவற்றில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிவருகிறார்.

இந்நிலையில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

காலம் மாறும்போது தவறிழைத்த தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தண்டனை நிச்சயம். வாக்குகளை திருடுவது வெறும் முறைகேடு மட்டுமல்ல, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல். குற்றவாளிகளே கேட்டுக் கொள்ளுங்கள், காலம் மாறும்போது தண்டனை நிச்சயம் என பதிவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News