Thursday, February 19, 2026

ரூ.100 கோடியை நெருங்கும் ‘கிங்டம்’ படத்தின் வசூல்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியான படம் ‘கிங்டம்’. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

திரைப்படம் வெளியான முதல் நாளில் 39 கோடி ரூபாய் வசூலித்தது.இந்நிலையில் படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 67 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் ரூ.100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News